• Profile photo of Swathi

      Swathi posted an update

      11 months ago

      நான் உன்கிட்ட பேசணும்
      நேரம் இருக்கா? என்கிறாய்.
      உனக்காகவே கட்டப்பட்ட மாடமாளிகையின்
      முற்றத்து வாசலில்
      சற்றுநேரம் நின்றுகொள்ள
      தயக்கத்துடன்
      அனுமதி கேட்பது போல.

      நான் என்ன செய்வேன்,
      இத்தனை காலம் கழிந்தும்
      இப்போதும் நீதான்
      வந்ததும்
      என்னை அழ வைக்கிறாய்.

      Love
      Santhi, Malar and 2 others
      2 Comments
      • நீண்ட நாட்கள் கழித்து அவளை / அவனை பார்க்க வேண்டும் என்று கண்ணீருக்கும் ஆசை இருக்காதா என்ன…🙃

        2